என்னோட புது ஸ்கூலை பத்தியும், என்னோட மனநிலை பத்தியும் அப்பாவிடம் எப்படி சொல்லற துன்னு ஒரே டென்ஷனா இருந்துச்சு. அதைப் பத்தி ஷூட்டிங் ஆரம்பத்துல சொல்லலாமா? நடுவுல சொல்லலாமா? இல்ல, முடியுறப்ப சொல்லலாமானு காத்திட்டிருந்தேன். ஒருநாள் எப்படி தைரியம் வந்ததுன்னே தெரியலை. டக்குன்னு ‘‘அப்பாஜி… நான் இனிமேல் படிக்கலை?’’ன்னு சொன்னேன். என்னைத் திரும்பிப் பார்த்தவர், ‘‘இது சினிமா உலகம்டா. ரொம்ப கஷ்டமா இருக்கும். ஒழுங்கா படிக்கிற வேலையைப் பாரு!’’ன்னு சொல்லாம, எனக்குப் பிடிச்ச மாதிரியே, ‘‘ஓ.கேடா பிரபு. இனி… என்கூடவே ஷூட்டிங் வந்துடு!’’ன்னு ஒரு நிமிஷம் கூட யோசிக்காம சொன்னார்.
அப்போ எனக்கு இருந்த சந்தோஷம் இருக்கே... அதை ‘சந்தோஷம்’ங்கிற சின்ன வார்த்தைக்குள்ள அடக்கவே முடியாதுங்க. நான் எங்கயோ போய்ட் டேன்! எனக்குள்ள ஒரு பெரிய வேகம் வந்துச்சு. அம்மாவுக்கும் விஷயம் தெரிஞ்சுட்டு. அவங்களும் அதை நல்ல படியா ஏத்துக்கிட்டாங்க. டான்ஸ்ல என்னோட ஈடுபாடு என்னன்னு அப்பா, அம்மாவுக்கு நல்லாவே தெரிஞ்சிருந்தது. அதனால ரெண்டு பேரும் என் மேல நம்பிக்கை வெச்சாங்க.
நான் அப்பாவோட அசிஸ்டென்ட்டா தான் என் கேரியரை ஆரம்பிச்சேன். அது அவரோட பையன்கிறதால சுலபமா நடந்தது. அசிஸ்டென்ட் ஆனதும் என்னோட ஐடியாவை அங்கும் இங்கும் சேர்த்து ஆட ஆரம்பிச்சுட்டேன். சினிமாவுல அப்போ டான்ஸ் டிரெண்ட் மாறி வந்த நேரம். அந்த நேரத்துல அப்பா, புலியூர் சரோஜா மாஸ்டர், ரகுராம் மாஸ்டர், தெலுங்குல சில மாஸ்டர்ஸ்னு நிறையப் பேர் இருந்தாங்க. எல்லாரும் பதினைஞ்சு, இருபது வருஷங்களுக்கு மேல டிராவல் செஞ்ச ஜாம்பவான்களா இருந்தாங்க. நான் சினிமாவுக் குள்ள முழு நேரமா இறங்கும்போது பதினாலு, பதினைஞ்சு வயசு இருக்கும். பிடிச்ச வேலைங்கிறதனால டான்ஸ் மேல ஒரு வெறின்னு சொல் வோமே,… அதைவிட அதிகமா இருந்துச்சு.
இனிமே எனக்கு எல்லாமே டான்ஸ் தான்னு முடிவானதால டெய்லி எனக்கு தீவாளி மாதிரிதான் இருக்கும். நைட் 2 மணிக்கெல்லாம் எந்திரிச்சி ஆடியிருக்கேன். ஹால்ல என் பக்கத்துல அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, மாமா எல்லாரும் ஒண்ணாதான் படுத்திருப்போம். என் கனவுல புதுப் புது டான்ஸ் மூவ்மென்ட்டா வரும். எங்க மறந்துடுவோமோன்னு சொல்லிட்டு அந்த நடு ராத்திரியில, 2 மணிக்கு எந்திரிச்சி சத்தமே இல் லாம ஆடி பார்த்துட்டு படுத்துப்பேன்.
அடுத்த நாள் அந்த மூவ்மென்ட்டை ரிகர்சல்ல போட்டுக் காட்டுவேன். எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சுடும். ஆச்சர்யமா பார்ப்பாங்க. பாராட்டுவாங்க. அந்த மாதிரி கனவுல வந்த நிறைய மூவ்மென்ட்டைத்தான் நீங்களும் படத்துல பார்த்திருக்கீங்க. இப்பவும் பார்க்கிறீங்க, பாராட்டுறீங்க. படத்துல நீங்க பார்க்கிற டான்ஸ் வெறும் 25 சதவீதம்தான். முழுசா 100 சதவீதம் பார்க்கணும்னா, ரிகர்சல்ல தான் பார்க்க முடியும். அப்படி அது வேற லெவல்ல இருக்கும்.
பொதுவா எல்லாருமே ஒரு பாட்டை ரிலீஸாகும்போதுதான் கேட்பாங்க. நடன இயக்குநர்கள் மட்டும் பாட்டு கம்போஸ் ஆன அடுத்த நாளே கேட்போம். அந்த டைம்ல அப்பா ஒரு டேப் ரிக்கார்டர் வெச்சிருந்தார். அதோட பேரு ஆயூஜா. வீட்டுல அது ரொம்ப வருஷம் இருந்துச்சு. அதில் சவுண்ட் வைக்கிற பட்டன் ரவுண்ட் ஷேப்ல இருக்காது. மேலேயும், கீழேயும் இறக்கி ஏத்துற டைப்புல இருக்கும். இளையராஜா சார் மியூசிக்தான். அவர் கம்போஸ் பண்ணின அடுத்தநாள் ஈவ்னிங் எங்க வீட்டுக்கு கேசட் வந்துடும். ராஜா சாராச்சே. எல்லா பாட்டும் சூப்பர் ஹிட்தான். வீட்டுல அவ்வளவு கேசட்டுங்க குவியும்.
பொதுவா, டான்ஸர் எல்லாரும் எந்த ஒரு பாட்டுக்கும் பெருசா ரியாக்ட் பண்ண மாட்டாங்க. டாக்டர்ஸ் தினமும் பேஷன்ட்டுகளைப் பார்க்கிற மாதிரிதான். எப்பவும் அவங்களுக்கு அதுதானே வேலை! டான்ஸ் மூவ் மெண்ட்ஸுக்கு எல்லாம் ஜாலியா ரியாக்ட் பண்ணுவாங்க. ஆனா, ’இந்தப் பாட்டு அப்படி.. இப்படி’ன்னு கமெண்ட் எதுவும் இருக்காது. எங்க வீட்டுல இருந்த ஆயூஜா டேப் ரிக்கார்டர் லைஃப்ல அதுவும் என் கூடவே டிராவல் பண்ணிச்சுன்னே சொல்லலாம். ஒரு கட்டத்துல அந்த டேப் ரிக்கார்டரோட கேசட் போட்டு குளோஸ் பண்ற மூடி உடைஞ்சே போச்சு. அப்பவும் அப்பாவுக்கு அதை விட மனசு இல்ல. அதை யூஸ் பண்ணிட்டேதான் இருந்தோம்.
இனிமே அதில் சுத்தமா பாட்டுக் கேட்க முடியாதுங்குற லெவல்லதான் அப்பா வேற டேப் ரிக்கார்டர் வாங்கினார்னு நினைக்கிறேன். ஆனாலும், அந்த டேப் ரிக்கார்டரை தூக்கிப் போட்டுடலை. எங்க வீட்டுலயே அது எங்கே இருந்துச்சோ அங்கேயே இருந்தது. இன்னும்கூட நான் வேற ஒரு டேப் ரிக்காடர் வாங்கவே இல்ல. இப்போகூட என் வீட்டுல ஆடியோ சிஸ்டம் கிடையாது.
அப்பாவோட ரிகர்சல் பெரும் பாலும் டான்ஸ் யூனியன்ல இருக்கும், தி.நகர்ல இருக்கும் வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்துல நடக்கும், எங்க வீட்டுலேயும் நடக்கும். எப்பவும் ரிகர்சல் காலையில 9 மணிக்கு ஆரம்பிச்சுடும். வீட்டுலேர்ந்து டான்ஸ் யூனியன் போக ஈஸியான ரூட்டுதான். அதை தெரிஞ்சிக்கவே எனக்கு ஒரு வருஷமாச்சு. ஏன்னா, வீட்டுல கார்ல ஏறி உட்கார்ந்ததும் கண்ணை மூடிட்டு ரிகர்சல் பண்ற பாட்டுக்குள்ளே போய்டுவேன். சின்ன பசங்களுக்கு ஐஸ்கிரீம், சாக்லேட் பார்த்தா எப்படி சந்தோஷம் வருமோ, அந்த மாதிரி டான்ஸ் ஆடப் போறோம்னு தெரிஞ்சவுடனே காலையிலயே எனக்கு மனசுல கொண்டாட்டம் ஸ்டார்ட் ஆயிடும். என்னை சுத்தி நடக்குற மத்த எதுவும் எனக்குத் தெரியாது. உடம்பு சரியில்லைன்னா இன்னும் அதிகமா ஆடுவேன். அப்போ வர்ற வியர்வையில் ஜூரம் இருந்தாலும் போய்டும்.
அப்பாகிட்ட அசிஸ்டென்டா சேர்ந்து ரிகர்சல், ஷூட்டிங்னு போயிட்டிருந்த நேரத்துல ஒருநாள் என்னை காலையில 9 மணிக்கெல்லாம், ‘‘நீ போய் ரிகர்ஷலைப் பாரு!’’ன்னு அப்பா அனுப்பினார். எனக்குப் புரி யலை. ‘‘நீங்க அப்பாஜி!’’ன்னு கேட் டேன். ‘‘நீ போ... நான் வர்றேன்!’’னு அப்பா சொன்னார். அம்மாவோட தம்பி நடராஜும் ஒரு டான்ஸர். அவரும் எங்க வீட்டுலதான் வளர்ந்தார். அப்பாகிட்டதான் வேலை பார்த்தார். அவரும் என்கூட வந்தார். டான்ஸர்ஸ் எல்லாரும் ரிகர்சல் ஹால்ல இருந்தாங்க. என்னைப் பார்த்தாங்க. கேஷுவலா இருந்தாங்க. நானும் எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியாம நின்னுட்டுருந்தேன். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, ‘‘அப்பா எங்கே?’’ன்னு கேட்டாங்க. ‘‘வருவார்’’னு மட்டும் நான் சொன்னேன். எங்க மாமா நடராஜ்தான், ‘‘இல்ல… ஃ பர்ஸ்ட் பிரபுவ ஆரம்பிக்க சொன்னாரு. அவர் மத்தியானமா வருவார்’ன்னு சொன்னார்.
அப்பாவோட டீம்ல இருக்கிற டான்ஸருங்க எல்லாரும் சீனியர்ஸ். அவங்க பார்த்து வளர்ந்த பையன் நான். சூப்பரா ஆடுறவங்க. அப்படிப்பட்ட டான்ஸர்கிட்ட அப்பா என்னை ரிகர்சல் பார்க்கச் சொன்னார்னு சொன்னப்போ… அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா?
- இன்னும் சொல்வேன்…
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago