தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை தற்காலிமாக நீக்க நடிகர் சங்கம் திட்டமிட்டு இருக்கிறது.
நடிகர் சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்ற உடன் பழைய உறுப்பினர்கள் தங்களது செலவு கணக்குகளை ஒப்படைத்தனர். அக்கணக்குகளை தணிக்கையாளர் மூலமாக சரிபார்த்து வந்தார்கள். அதன்படி நடிகர் சங்க அறக்கட்டளை கணக்குகள் சரியாக ஒப்படைக்கப் படாததால் பொருளாதரா குற்றப்பிரிவில் புகார் அளிக்க புதிய நிர்வாகிகள் முடிவு செய்தார்கள்.
இந்நிலையில், நேற்று நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகிய மூவரையும் நடிகர் சங்கப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்குவது குறித்து ஆலோசித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக செயற்குழு உறுப்பினரிடம் விசாரித்த போது, "நடிகர் சங்கப் உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கலாம் என்று ஆலோசித்தது உண்மை தான். ஏனென்றால் பழைய கணக்குகளை சரிவர ஒப்படைக்காததால் எங்களால் சுதந்திரமாக பணியாற்ற முடியவில்லை. மேலும், ஒவ்வொரு விஷயத்திற்கும் ஏன் இப்படி ஆனது என்று நாங்கள் கேட்டால், அவர்களோ அதற்கு பதிலளிக்க சில காலங்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.
அறக்கட்டளை கணக்குகளில் தணிக்கையாளர் சுமார் 1.60 கோடி பணத்துக்கு கணக்கில்லை என்கிறார். அக்கணக்குகளை சரிவர ஒப்படைக்கும் வரை மூவரையும் தற்காலிகமாக உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க திட்டமிட்டு இருக்கிறோம். ஒரு உறுப்பினர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்தால், அவர் அக்குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கும் வரை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கலாம் என்பது நடிகர் சங்க சட்டத்தில் இருப்பது தான்." என்று தெரிவித்தார்.
சரத்குமார் உள்ளிட்ட மூவர் நீக்கம் உண்மையா என்பது குறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் கேட்ட போது, "இது குறித்து இறுதிமுடிவு இன்னும் எடுக்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago