'வலிமை’ படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் ‘வலிமை’ படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. 2 நிமிடம் 50 நொடிகள் ஓடக்கூடிய இந்த ட்ரெய்லர் வெளியான ஒருசில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றது.
இந்நிலையில் இப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. 'வலிமை’ படத்தில் சில வன்முறைக் காட்சிகள் இருப்பதால் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சான்றிதழை அஜித்தின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
51 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago