இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சிக்கு இணையதளம்: ரஜினிகாந்த் அறக்கட்டளை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சிக்கு இணையதளம் தொடங்கியுள்ளதாக ரஜினிகாந்த் அறக்கட்டளை அறிவித்துள்ளது. ரஜினிகாந்த் இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்.

1975-ல் அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் அறிமுகமான ரஜினிகாந்த் 40 ஆண்டுகள் கடந்தபின்னும் இன்றும் தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகளை ரஜினிகாந்த் அறக்கட்டளை தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியே ஒரு இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.

ரஜினி தொடங்கியுள்ள ரஜினிகாந்த் பவுண்டேஷன் இணையதளத்தின் முகப்பு

இதுகுறித்து ரஜினிகாந்த் அறக்கட்டளை தனது இணையதளத்தில் கூறியுள்ளதாவது:

''ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் கல்வியை ஒரு கருவியாகப் பயன்படுத்த்தி ஒரு புதிய சமுதாயத்தைப் படைக்க விரும்புகிறோம். நிர்வாகம், முற்போக்கான சிந்தனை, தலைமைத்துவம், அறிவியல் மனப்பான்மை, ஜனநாயகமயமாக்கப்பட்ட கல்வி மற்றும் நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சமுதாயத்தை உருவாக்க எண்ணுகிறோம்.

மனிதகுல சேவையே கடவுளுக்கான சேவை என எண்ணுகிறோம். அதில் முக்கியமானது குந்தைகளுக்கான அறிவு ஆகும். ரஜினிகாந்த் அறக்கட்டளை முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் நடத்தப்படும் அமைப்பு என்பதால் ஆர்வமுள்ள தகுதியான தொண்டர்களும் (தன்னார்வலர்களும்) இதில் இணைந்து இந்த சேவையில் ஈடுபடலாம். தன்னார்வலர்களின் பலம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றைக் கண்டறிந்து, அறக்கட்டளையின் முன்முயற்சிகளில் அவர்களை ஈடுபடுத்த விரிவான நேர்காணல் செயல்முறையின் அடிப்படையில் நாங்கள் தொண்டர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்.

தற்போது இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகளைத் தொடங்கியுள்ளோம். இனிவரும் காலங்களில் எங்கள் பயிற்சிக் களத்தில் இந்திய அரசின் பல்வேறு உயர் பதவிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படும். நிர்வாகத்துறைக்கான ஐஏஎஸ் பயிற்சி, ராணுவம், நீதித்துறை, காவல்துறை, மத்திய, மாநில அமைச்சுப் பணி, வங்கிப் பணிகளில் ஈடுபடுத்தவும் தகுதிவாய்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும்.

பயிற்சியில் முன்னுரிமை அளிக்கப்படும் மாணவர்கள் பற்றிய விவரம்: வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு 20 சதவீதம், முதல் தலைமுறை பட்டதாரியாக இருக்கும் மாணவர்களுக்கு 20 சதவீதம், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு 10 சதவீதம், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட ஒற்றை பெற்றோர் உள்ள குழநதைகளுக்கு 14 சதவீதம், 3 ஏக்கருக்கும் குறைவான நிலமுள்ள விவசாயிகளின் குழந்தைகளுக்கு 16 சதவீதம், பொதுப்பிரிவில் முதல் மதிப்பெண் பெறும் முதல் 10 மாணவ அல்லது மாணவியருக்கு 20 சதவீதம் எனப் பயிற்சிகளுக்கான வாய்ப்புகள் அளிக்கப்படும்.

பயிற்சி பெற விரும்புவோர் www.rajinikanthfoundation.org என்ற தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ரஜினி அறக்கட்டளையுடன் தொடர்புகொள்ள விரும்புபவர்கள் 044 3556 7696 மற்றும் 98400 59805 ஆகிய எண்களிலும் Tycoon House of Justice, No.2, First Floor,4th Main Road, R.A.Puram, Chennai 28 என்ற முகவரியிலும் அணுகலாம்''.

இவ்வாறு ரஜினிகாந்த் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்