விஜய் நடிக்கவுள்ள 67வது படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து தில் ராஜு தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். 'தோழா', 'மஹரிஷி' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் வம்சி இதனை இயக்கவுள்ளார். இது விஜய் நடிப்பில் உருவாகும் 66-வது படம் என்பதால் 'தளபதி 66' என்று அழைக்கப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இந்தப் படம் உருவாகிறது. இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.
இப்படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கவுள்ள 67வது படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து இன்னும் உறுதியாகவில்லை. அது வெற்றிமாறன் அல்லது லோகேஷ் கனகராஜாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா நடிகர் விஜய்யை சந்திந்துப் பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. உடனே நெட்டிசன்கள் பலரும் ‘தளபதி 67’ படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்று கூறி வந்தனர். இது தொடர்பான ஹாஷ்டேகுகளும் ட்ரெண்டாகி வந்தன.
» ‘ராக்கி’ இயக்குநருடன் கைகோர்க்கும் தனுஷ்
» விஜய் சேதுபதி- கேத்ரீனா நடிப்பில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படப்பிடிப்பு தொடக்கம்
ஆனால் இது தொடர்பாக எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் இருவர் தரப்பும் வெளியிடவில்லை. மேலும் இருவரும் மரியாதை நிமித்தமாகவும் சந்தித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
2003ஆம் ஆண்டு கே.பி.ஜகன் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த ‘புதிய கீதை’ படத்துக்கு கடைசியாக யுவன் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago