நடிகையாக அறிமுகமாகும் கலா மாஸ்டர்

By செய்திப்பிரிவு

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார் கலா மாஸ்டர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. விக்னேஷ் சிவன் மற்றும் லலித் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் பிப்ரவரி மாதம் திரைக்கும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் மூலம் பிரபல நடன இயக்குநரான கலா மாஸ்டர் நடிகையாக அறிமுகமாகிறார். இப்படத்தில் அவருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் எனவும், இதற்காக 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

1989ஆம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘புதுப்புது அர்த்தங்கள்’ படம் மூலம் நடன இயக்குநராக அறிமுகமான கலா மாஸ்டர் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமாவின் முக்கிய நடன இயக்குநராக இருந்து வருகிறார்.

இவரது சகோதரி பிருந்தா தற்போது ‘ஹே சினாமிகா’ படம் மூலம் இயக்குநராகியுள்ள நிலையில் கலா மாஸ்டர் நடிகையாக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

மேலும்