“எனது மிகச்சிறந்த பயணம்”; விஜய்யுடன் சதீஷ் - வைரலாகும் புகைப்படம்

By செய்திப்பிரிவு

விஜய்யுடன் காரில் சதீஷ் அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதீஷ் நாயகனாக நடித்துள்ள படம் 'நாய் சேகர்'. இப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி நாயகியாக நடிக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ப்ரவீன், இசையமைப்பாளராக அஜீஷ் அசோக் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சொகுசு காரில் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ‘என்னுடைய பயணம் அவ்வளவு மோசமானதல்ல’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஹர்பஜனின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்திருந்த நடிகர் சதீஷ் அத்துடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதில் நடிகர் விஜய் கார் ஓட்ட அவரது அருகில் சதீஷ் அமர்ந்திருக்கிறார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் ‘பைரவா’ படத்தின்போது எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்