பா.இரஞ்சித் இயக்கி வந்த ‘நட்சத்திரம் நகர்கிறது’ படப்பிடிப்பு நிறைவடைந்தது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, துஷாரா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சார்பட்டா பரம்பரை'. ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்துக்குப் பிறகு ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவித்து அதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்கினார் பா.இரஞ்சித். ரொமான்டிக் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரிகிருஷ்ணன், ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிஷோர் குமார் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய டென்மா இசையமைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த ‘நட்சத்திரம் நகர்கிறது’ படப்பிடிப்பு இன்று (டிச.20) நிறைவடைந்தது. இதனை நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இது தொடர்பான சில புகைப்படங்களை அவர் பகிர்ந்து படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago