'மண்டேலா' இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?

By செய்திப்பிரிவு

'மண்டேலா' இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மண்டேலா'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, பின்பு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளதாகவும், அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இதற்கான படப்பிடிப்புப் பணிகள் தொடங்கப்படும் என்றும் திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

தற்போது சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இது தவிர்த்து ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’, தெலுங்கில் ஒரு படம் என சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் வரிசையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்