நடிகர் விக்ரமுக்கு கரோனா தொற்று?

By செய்திப்பிரிவு

நடிகர் விக்ரமுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனாவின் மற்றொரு பிரிவான ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் உருவாகி பரவி வருகிறது. இந்த வைரஸ் தற்போது பல நாடுகளில் பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் தற்போது இந்தியா உட்பட 63 நாடுகளில் பரவியுள்ளது. நேற்று (16.12.21) நைஜீரியாவிலிருந்து சென்னை திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த ஏழு பேரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.

சமீபத்தில் நடிகர் அர்ஜுனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்திருந்தார். ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த ‘சர்வைவர்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அர்ஜுன் சமீபத்தில் சென்னை திரும்பியிருந்தார்.

இந்நிலையில் இன்று நடிகர் விக்ரமுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் விக்ரம் தரப்பில் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்