விஜய் ஆண்டனி படத்தில் விஜயகாந்த்?

By செய்திப்பிரிவு

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

என்.வி.நிர்மல் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் ‘சலீம்’. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ‘மழை பிடிக்காத மனிதன்’ என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தை விஜய் மில்டன் எழுதி, இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டையூ டாமன் பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2022ஆம் ஆண்டு திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன் ரமணா, சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க தேமுதிக தலைவர் விஜயகாந்தைப் படக்குழு அணுகியதாகக் கூறப்படுகிறது. படத்தில் விஜயகாந்த் கதாபாத்திரத்தைச் சுற்றியே கதை நகரும் என்பதால் அதில் அவரை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு விஜயகாந்த் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், வரும் ஜனவரி மாதம் விஜயகாந்த் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் திரையுலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

எனினும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் படக்குழுவோ, விஜயகாந்த் தரப்போ உறுதி செய்யவில்லை.

இறுதியாக விஜயகாந்த் தனது மகன் நடிப்பில் வெளியான ‘சகாப்தம்’ படத்தில் கவுரவ வேடத்தில் தோன்றியிருந்தார். அதன் பிறகு விஜயகாந்த எந்தத் திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்