சிவகார்த்திகேயனின் ‘டான்’ படப்பிடிப்பு நிறைவு 

By செய்திப்பிரிவு

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'டான்'. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகின்றன.

இதில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஆர்.ஜே.விஜய், சிவாங்கி உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார்கள். இதில் கவுரவக் கதாபாத்திரத்தில் கெளதம் மேனனும் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக கே.எம்.பாஸ்கரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே இதன் டப்பிங் பணிகளும் நடந்து வந்தது. இந்நிலையில் இன்று (10.12.21) ‘டான்’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு இது தொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.

இறுதிகட்ட பணிகளை முடித்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்