பிரபுதேவா நடிக்கவுள்ள ‘மை டியர் பூதம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டது.
பிரபுதேவா நடிப்பில் ‘தேள்’, ‘பஹீரா’, ‘யங் மங் சங்’ உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. இதில் ‘தேள்’ படம் இன்று (டிசம்பர் 10) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுப் பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து இந்தியில் ஷிஷ் குமார் துபே இயக்கத்தில் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபுதேவா. இப்படத்துக்கு ‘ஜர்னி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது என்.ராஜவன் இயக்கத்தில் ‘மை டியர் பூதம்’ என்ற திரைப்படத்தில் பிரபுதேவா நடித்து வருகிறார். இதில் மாஸ்டர் அஸ்வந்த் குமார், ரம்யா நம்பீசன், பிக் பாஸ் சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக இப்படத்தை ரமேஷ் பிள்ளை தயாரிக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டது. ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகும் இதில் பிரபுதேவா பூதமாக நடிக்கவுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago