இறுதிகட்ட படப்பிடிப்பில் வெந்து தணிந்தது காடு

By செய்திப்பிரிவு

சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்தப் படத்தின் கதையினை ஜெயமோகன் எழுதியுள்ளார். இதில் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சிலம்பரசனுக்கு நாயகியாக கயடு லோஹர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியராக தாமரை ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 'பாஸ்ட் அண்ட் ஃபுரியஸ் 5', 'தி ஸ்பை நெக்ஸ்ட் டோர்' உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் படங்களின் சண்டைக் காட்சிகளில் பணிபுரிந்த லீ விட்டேகர் இப்படத்திலும் பணிபுரிகிறார்.

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையில் அரங்குகள் அமைத்து சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கினார்கள்.

இரண்டு கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பை படக்குழு மும்பையில் தொடங்கியுள்ளது. இதற்கான புகைப்படத்தை நடிகர் சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்