யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
மலையாளத் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ரெஜிஷ் மிதிலா. ‘இன்னுமுதல்’, ‘வாரிகுழியிலே கொலபாதகம்’, ‘லால் பகதூர் & சாஸ்திரி’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது தமிழில் யோகி பாபுவை நாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார். ரெஜிஷ் மிதிலா எழுதி, இயக்கி, தயாரிக்கும் இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஃபேண்டஸி வகை திரைப்படமாக உருவாகவுள்ளது. இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று (டிச.07) பூஜையுடன் தொடங்கியது. இதில் யோகி பாபு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இப்படத்தில் யோகி பாபு மற்றும் ரமேஷ் திலக் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க, ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா, நாகவிஷால் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக சென்னை, ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
தி கிரேட் இந்தியன் சினிமாஸ் சார்பில் ரெஜிஷ் மிதிலா, லிஜோ ஜேம்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு கார்த்திக் எஸ்.நாயர் ஒளிப்பதிவு செய்ய, பரத் சங்கர் இசையமைக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago