ரஜினியை வைத்து பாண்டிராஜ் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இது தொடர்பாக பாண்டிராஜ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிகின்றனர். இப்படம் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்துக்குப் பிறகு ரஜினியை வைத்து பாண்டிராஜ் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி வந்தது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ரஜினி தரப்போ பாண்டிராஜ் தரப்போ வெளியிடவில்லை.
இதனைத் தொடர்ந்து திரையுலக வட்டாரங்களில் இது தொடர்பாக விசாரித்தபோது இதுவரை பாண்டிராஜ் ரஜினியைச் சென்று சந்திக்கவில்லை என்றும் அப்படியான தகவல்களில் உண்மை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago