கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு குறித்து எடுக்கப்பட்டுள்ள ‘ராமானுஜன்’ என்ற திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இச்சந்திப்பில், இயக்குநர் ஞான ராஜசேகரன், நடிகர் ஓய்.ஜி.மகேந்திரன், ராமானுஜன் கதாபாத்திரத்தில் நடித்த அபினய் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மகாகவி பாரதியார், பெரியார் குறித்து திரைப்படங்கள் இயக்கிய இயக்குநர் ஞான ராஜசேகரன், கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு குறித்து இயக்கிய திரைப்படம் ‘ராமானுஜன்’. இயக்குநர் ஞான ராஜசேகரனின் மகள் சிந்து ராஜசேகரன், சுஷாந்த் தேசாய், சரண்யன் நடதூர், ஸ்ரீவட்சன் நடதூர் ஆகியோர் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தில், ராமானுஜன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபினய் நடித்துள்ளார்.
மேலும், இத்திரைப்படத்தில் நடிகர் ஓய்.ஜி.மகேந்திரன், நடிகை சுஹாசினி, நடிகர் ராதாரவி, நடிகர் அப்பாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒரே நேரத்தில், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளர்கள் சந்தப்பில் பேசிய இயக்குநர் ஞான ராஜசேகரன், “இத்திரைப்படம் விருதுக்காக எடுக்கப்பட்டதல்ல,” என்று தெரிவித்தார். இதனை அமோதிக்கும் விதமாக, இத்திரைப்படம் ஒரு கமர்ஷியல் படமே என்றும், இது பொதுமக்கள் இடையே மாபெரும் வெற்றி பெறும் என்றும் நடிகர் ஓய்.ஜி.மகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பின் வீடியோ வடிவம் கீழே...
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago