விஜய் படத்துக்கு இசையமைக்கும் தமன்

By செய்திப்பிரிவு

‘தளபதி 66’ படத்துக்கு தமன் இசையமைப்பது உறுதியாகியுள்ளது.

'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் ஒரு படம் திட்டமிடப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்த இப்படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தமானார். ஆனால், சில காரணங்களால் இந்தப் படம் கைவிடப்பட்டது. இதன் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் 'பீஸ்ட்' திரைப்படத்தில் விஜய் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து தில் ராஜு தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். 'தோழா', 'மஹரிஷி' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் வம்சி இதனை இயக்கவுள்ளார். இது விஜய் நடிப்பில் உருவாகும் 66-வது படம் என்பதால் 'தளபதி 66' என்று அழைக்கப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இந்தப் படம் உருவாகிறது. இப்படத்துக்கு தமன் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுகுறித்துப் படக்குழு எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்தது.

இந்நிலையில் ‘தளபதி 66’ படத்துக்கு தமன் இசையமைப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிடவுள்ளது.

இது தவிர இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகி வரும் படத்துக்கும் தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

மேலும்