மீண்டும் ரஜினியை இயக்கும் சிவா? 

By செய்திப்பிரிவு

ரஜினியின் அடுத்த படத்தை சிவா இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் ரஜினியுடன் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளி பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தையும் சிவாவே இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது தனது அடுத்த படத்தை சூர்யாவை வைத்து இயக்க சிவா பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக தெரிகிறது. அப்படம் உறுதியானால் உடனடியாக படப்பிடிப்பை தொடங்கி குறுகிய காலத்தில் படத்தை முடிக்கவும் சிவா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன் பிறகே ரஜினி படத்துக்கான பணிகளை சிவா தொடங்குவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினியை வைத்து அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு படம் தயாரிக்க விரும்புவதாகவும், அப்படத்தை இயக்க சிவாவின் பெயரையே ரஜினியிடம் அவர் பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்