த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் இப்படத்தில் சில சர்ச்சைக்குரிய இடம்பெற்றுள்ளதாக சிலர் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டவும் தவறவில்லை. உதாரணமாக இந்தி பேசும் நபர் ஒருவரை பிரகாஷ்ராஜ் அறையும் காட்சி, காவல் அதிகாரி ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற காலண்டர் உள்ளிட்ட காட்சிகளை குறிப்பிட்டு பலரும் ‘ஜெய் பீம்’ படத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அந்த காலண்டர் தொடர்பான காட்சியில் வேண்டுமென்றே ஒரு குறிப்பிட்டு சமூக மக்களை இழிவுபடுத்துவது போல காட்சியமைக்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் விமர்சித்தனர்.
» ‘தலைவணங்குகிறேன்' - 'ஜெய் பீம்' படக்குழுவுக்கு மாதவன் பாராட்டு
» யுவனுக்கு பதில் சாம் சி.எஸ்: 'சாணிக் காயிதம்' படத்தில் இசையமைக்க ஒப்பந்தம்
இந்நிலையில் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் மேற்குறிப்பிட்ட அந்த காட்சியில் அந்த காலண்டரில் இருந்த சர்ச்சைக்குரிய படம் நீக்கப்பட்டு தற்போது சரஸ்வதி படம் வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
சினிமா
21 mins ago
சினிமா
29 mins ago
சினிமா
50 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago