ரஜினி நடிக்கும் 'அண்ணாத்த' படம் வெளியானதால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே ரஜினியுடன் நடித்துள்ளது. டி.இமான் இசையமைப்பில் இப்படத்தில் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் ஏற்கெனவே ஹிட்டடித்து விட்டன.
ரஜினிகாந்தின் 168வது படமான ‘அண்ணாத்த’ வெளியீட்டிற்காக ரஜினியின் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இன்று (04.11.21) ‘அண்ணாத்த’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நேற்று முதலே ‘அண்ணாத்த’ தொடர்பான ஹாஷ்டேகுகள் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தன. இந்நிலையில் இன்று ‘அண்ணாத்த’ படத்தின் முதல் காட்சி பல்வேறு திரையரங்கங்களில் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. ரஜினி ரசிகர்கள் பலரும் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago