'அன்புசெல்வன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தொடர்பாக கெளதம் மேனன் காட்டமாக பதிலளித்துள்ளார்.
இன்று (நவம்பர் 3) காலை முதல் சமூக வலைதளத்தில் கெளதம் மேனன் நாயகனாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் விஷ்ணு விஷால் உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிடுவார்கள் எனவும் கூறப்பட்டது.
அதன்படி இயக்குநர் பா.இரஞ்சித் 'அன்புசெல்வன்' என்று பெயரிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'காக்க காக்க' படத்தில் சூர்யா கதாபாத்திரத்தின் பெயர் அன்புசெல்வன். அந்தப் பெயரில் படம் என்பதால், கெளதம் மேனனுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.
இதனிடையே, கெளதம் மேனனின் ட்வீட் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது என்ன படமென்று எனக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ளார் கெளதம் மேனன்.
» யூடியூபில் சாதனை படைத்த ‘ஆர்ஆர்ஆர்’ க்ளிம்ப்ஸ்
» இப்போதும் அழுகை வரும்; ‘செங்கேணி’ கதாபாத்திரத்திலிருந்து வெளியே வரமுடியவில்லை: லிஜோமோல் ஜோஸ்
'அன்புசெல்வன்' படம் தொடர்பாக கெளதம் மேனன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இது எனக்கு அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது. நான் நடிப்பதாகக் கூறப்படும் இந்தப் படம் பற்றி என்று எதுவும் தெரியாது. இந்த போஸ்டரில் பெயர் போட்டிருக்கும் இயக்குநரை எனக்குத் தெரியாது. அவரை நான் சந்திக்கவும் இல்லை. தயாரிப்பாளருக்கு இதை ட்வீட் செய்ய பிரபலமான பெயர்கள் கிடைத்துள்ளன. இது போன்ற ஒன்றை மிக எளிதாகச் செய்ய முடியும் என்பது அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது".
இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago