'அண்ணாத்த' திரைப்படம் வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் தமிழ்ப் படம் என்ற சாதனை புரிந்துள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அண்ணாத்த'. நவம்பர் 4-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டீஸர், ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்துமே ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளன.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதனால் அதிகப்படியான திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, வெளிநாட்டில் அதிகப்படியான திரையரங்குகளில் வெளியாகும் தமிழ்ப் படம் என்ற சாதனையைப் புரிந்துள்ளது 'அண்ணாத்த'. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"வெளிநாடுகளில் இதுவரை வெளியான தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்ச திரையரங்குகளை 'அண்ணாத்த' பெற்றுள்ளது. 1100-க்கும் மேல் இன்னும்".
இவ்வாறு சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்ட சில மணித்துளிகளில் பல்வேறு திரையரங்குகளில் முடிந்துவிட்டது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் பலரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
சினிமா
17 mins ago
சினிமா
23 mins ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago