சிவகுமார் 80-வது பிறந்த நாள்: ஆச்சரியம் அளித்த சூர்யா - கார்த்தி

By செய்திப்பிரிவு

சிவகுமாரின் 80-வது பிறந்த நாளன்று சூர்யா - கார்த்தி இருவருமே இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்கள்.

அக்டோபர் 27-ம் தேதி தனது 80-வது பிறந்த நாளைக் கொண்டாடினார் சிவகுமார். அன்றைய தினத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்கள். சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே தங்களுடைய படப்பணிகளை ஒதுக்கிவிட்டு, அன்றைய தினத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

அன்றைய தினத்தில் சிவகுமாருக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்துள்ளனர் சூர்யா மற்றும் கார்த்தி. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள அப்பாவுக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் பள்ளிக் காலத்து நண்பர்கள் என அனைவரையும் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். இதற்காக தனியாக கார்கள் ஏற்பாடு செய்து, ஒட்டுமொத்த செலவையும் இருவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும், சிவகுமாருக்கு நெருங்கிய ஓவியர்களையும் அழைத்துள்ளனர். திரையுலகில் இருந்து சிவகுமாரிடம் அடிக்கடி பேசும் ஏ.வி.எம் சரவணன், கலைஞானம் உள்ளிட்ட அனைவரையும் குடும்பத்துடன் அழைத்துள்ளனர்.

அன்றைய தினத்தில் தனது நெருங்கிய நண்பர்கள் அனைவரையும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார் சிவகுமார். நீண்ட நேரம் அவர்களுடன் பழைய நினைவுகளை எல்லாம் பேசியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்