விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் மூலம் கிரிக்கெட் வீரரின் தங்கை நாயகியாக அறிமுகமாகிறார்.
படங்கள் இயக்குவது மட்டுமன்றி, நயன்தாராவுடன் இணைந்து படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான 'நெற்றிக்கண்' இவருடைய ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்ததுதான். அதனைத் தொடர்ந்து 'கூழாங்கல்', 'ராக்கி' உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றினார். இந்தப் படங்களைத் தொடர்ந்து, அடுத்து படங்களைத் தயாரிக்கவும் கதைகள் கேட்டு வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இப்படத்துக்கு ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் விநாயக் இயக்குகிறார். ‘சூரரைப் போற்று’ படத்தில் சே என்ற கதாபாத்திரத்தில் நடித்த கிருஷ்ணகுமார் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
பிரபல பாடகி ஜோனித காந்தி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் தவிர பிரபல கிரிக்கெட் வீரர்கள் தீபக் சாஹர், ராகுல் சாஹர் ஆகியோரின் தங்கையான மால்தி சாஹர் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உறுதி செய்துள்ளார்.
» கமலின் 'விக்ரம்' படப்பிடிப்பு: சென்னை காவல்துறை அனுமதி மறுப்பு
» விதியின் கொடூரமான முடிவு: புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
இப்படம் தவிர்த்து கவின் நாயகனாக நடிக்கும் ‘ஊர்க்குருவி’ என்ற படத்தையும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago