விஞ்ஞானத்தைத் தவிர்த்துவிட்டு எந்தக் கலையும் இயங்க முடியாது: கவிஞர் வைரமுத்து நேர்காணல்

By மகராசன் மோகன்

கடந்த ஆண்டு இலக்கியப் படைப்புகளுக்கு அதிக நேரம் ஒதுக்கிய கவிஞர் வைரமுத்து இந்த ஆண்டு திரைப் பாட்டெழுத அதிகமான நேரம் செலவிடுகிறார். விஜய், சூர்யா, விஷால், கார்த்தி, விஜய் சேதுபதி, விக்ரம் பிரபு உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்குப் பாடல் எழுதும் பணியில் பரபரப்பாக இருந்தவரைச் சந்தித்தோம்.

திரைப்படப் பாடல்கள் வழியே கதை சொல்லும் பாங்கு குறைந்து வருகிறதே?

படங்களில் கதை இருந்தால் பாடல் ஆசிரியனும் கதை சொல்வான். வெறும் சம்பவங்களால் கோக்கப் பட்ட படங்களில் கதை சொல்லும் தளம் எங்கே இருக் கிறது? சில சூழல்களில் படத்துக்குப் பாடல் என்பது ஒலிக் குறிப்புகளாகவும், ஓசைச் சேர்க்கையாகவும் அமைந்துவிடுகின்றன.

சில நேரங்களில் மனிதர்கள் பொருளற்ற மொழி யில் பேசுவதுண்டு. மனதின் ஓசைகளை மனிதர்கள் தங்களது முணுமுணுப்பாக வெளியிடுவதும் உண்டு. அந்த உத்தி பாடல்களுக்குள் வரும்போது மொழி ஒரு ஓரமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது. இந்த நிலை நீடிக்கும் என்று சொல்ல முடியாது. பாடலாசிரியன் தன் மொழியை விதைக்க ஆசைப்படுகிறான். அதற்குக் கதை என்ற நிலத்தைக் கோருகிறான். கதைச் சத்து நிறைந்த பாடல்கள் இப்போது முற்றிலும் வரவில்லை என்று சொல்ல முடியாது. எல்லாக் காலத்திலும் ஒலிக் குறிப்புகள் உள்ள பாடல்கள் வரவே செய்திருக்கின்றன. இன்றைக்குக் கொஞ்சம் அதிகம்.

யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் தமிழ்ப் பாடல்களைப் பதிவேற்றம் செய்யும்போது வரிகளை அப்படியே ஆங்கிலத்தில் எழுதுவது அதிகரித்து வருகிறதே?

ஆங்கிலத்தில் அதற்கு ‘டிரான்ஸ்லிட்ரேஷன்’ என்று பெயர். இது மொழிபெயர்ப்பு அல்ல. ஒலிபெயர்ப்பு. இதில் எனக்கு உடன்பாடில்லை. ஒலிபெயர்ப்பு தேவையில்லை. அதில் பயன் இல்லை. அந்தப் பாடல்களின் பொருளை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் போடுங்கள். மொழிபெயர்க்கும் போதுதான் பாடலின் தரம் விளங்கும்

இளைஞர்கள் பலரும் அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த தேவைகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். விஞ்ஞானத் தமிழை வளர்க்க இந்தச் சூழல் சரியாக இருக்கும் இல்லையா?

ஒரு காலத்தில் மதம், இலக்கியம், கலைகள், போர்கள் ஆகியவை ஆக்கிரமித்த இடத்தை இன்று மொத்தமாக விஞ்ஞானம் பிடித்திருக்கிறது. விஞ்ஞானத்தைத் தவிர்த்துவிட்டு எந்தக் கலையும் இங்கே இயங்க முடியாது. புறவாழ்க்கையை மேம்படுத்த வந்ததுதான் விஞ்ஞானம். நேரத்தையும், தூரத்தையும், உடல் உழைப்பையும் சுருக்க வந்ததுதான் விஞ்ஞானம். ஆனால், இன்றைக்கு அந்த விஞ்ஞானம் இல்லாமல் நுண்கலை களும் இயங்கமுடியாத அளவுக்கு அது வளர்ந்திருக் கிறது.

எழுத்தறிவு இல்லாதவர்களும் இன்றைக்கு அலைபேசி உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்தி எண் அறிவு பெற்று வளர்ந் தவர்களாக இருக்கிறார்கள். இந்த விஞ்ஞான வளர்ச்சியில் மொழியை அழிய விட்டுவிடக்கூடாது. அதிகப் படியான அறிவியல் கலைச் சொற்களை உண்டாக்க வேண்டும். அந்தப் பொறுப்பு பல்கலைக் கழகங்களுக்கு மட்டும் அல்ல; ஊடகங்கள், தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் ஆகியோருக்கும் உள்ளது.

புதிய விஞ்ஞானக் கலைச் சொற்களைக் கண்டுபிடியுங்கள். தமிழன் விஞ்ஞானப் பொருளைத்தான் கண்டுபிடிக்க முடியவில்லை. குறைந்தபட்சம் பெயர்களை யாவது கண்டு பிடித்துப் புழங் கட்டுமே. மொழி என்பது வெறும் சொல்லல்ல; பொருள் குறித்த அறிவு.

சமீப காலமாக புதிய திரைப்பட இசையமைப்பாளர் களின் வருகை அதிகரித்து வருகிறதே?

படங்களின் எண்ணிக்கை வளர்ந்து வருவதால் இசையமைப்பாளர்களும், பாடலாசிரியர்களும் வளர்ந்தே ஆக வேண்டும். ஆண்டுக்கு 205 முதல் 210 படங்கள் வெளியாகின்றன. அத்தனைக்கும் ஒரே இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், நடிகர், பாடலாசிரியர் பணியாற்ற முடியாது. பல கலைஞர்கள் வேண்டும்; அதில் தகுதி உள்ளது தப்பிப் பிழைக்கும்.

தற்போது எந்தெந்தப் படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறீர்கள்?

விஜய் நடிக்கும் அவரது 60-வது படம், மணிரத்னம் இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் புதிய படம், லிங்குசாமி இயக்கும் படம், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘24’, சீனுராமசாமியின் ‘தர்மதுரை’, விஷாலின் ‘மருது’, கார்த்தியின் ‘காஷ்மோரா’, சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படம், விக்ரம் பிரபுவின் ‘வாகா’ உள்ளிட்ட படங்களுக்கு பாடல் எழுதி வருகிறேன்.

பாரதிராஜாவின் ‘ஓம்’ படத்துக்கு எழுதவில்லையா?

நேரடியாக எழுதவில்லை. ஆனால், நான் எழுதிய தனிப் பாடல் ஒன்றை எடுத்தாண்டிருக்கிறார்.

யாருக்கு ஓட்டுப் போடு வீர்கள்?

இதிலென்ன சந்தேகம். என் தொகுதியில் போட்டியிடும் ஒரு வேட்பாளருக்குத்தான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

மேலும்