நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நாள் தங்கியிருந்து பரிசோதனையை முடித்துக் கொண்டு வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பான நிலையில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் இது குறித்து விளக்கியுள்ளார்.
அதில் அவர், ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அதன்படி முழு உடல் பரிசோதனைக்காக அனுமதியாகியுள்ள அவர் ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் தங்கியிருப்பார். பின் வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.
» சமூக வலைதளப் பதிவால் உருவான சர்ச்சை: பார்த்திபன் விளக்கம்
» அரசு மருத்துவமனை விவகாரம்; ஜோதிகா பேச்சுக்குப் பிறகு மாற்றங்கள் வந்திருக்கின்றன: சூர்யா பேட்டி
அண்மையில், 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
விருதினைப் பெற்ற அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago