அஸ்வின் நடித்து வரும் 'என்ன சொல்ல போகிறாய்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்துள்ள நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி 2'. சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி இதுதான். இதில் போட்டியாளராகக் கலந்துகொண்டு பிரபலமானவர் அஸ்வின்.
தற்போது ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் அஸ்வின். 'என்ன சொல்ல போகிறாய்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இன்று (அக்டோபர் 27) 'என்ன சொல்ல போகிறாய்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு. வெளியிட்டுள்ளது. இதற்குப் படக்குழுவினருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
» 'பருத்திவீரன்' குறித்து இன்னும் மக்கள் பேசுவதில் மகிழ்ச்சி: கார்த்தி
» இப்போதுதான் வெற்றியை நோக்கிய பயணம் தொடங்கியிருக்கிறது: பார்த்திபன் உற்சாகம்
இதில் அவந்திகா, தேஜு அஸ்வினி, 'குக் வித் கோமாளி' புகழ் உள்ளிட்ட பலர் அஸ்வினுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக விவேக் - மெர்வின் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago