நீச்சல் போட்டியில் பதக்கங்களைக் குவித்த மாதவனின் மகன்

By செய்திப்பிரிவு

நடிகர் மாதவனின் மகன் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் ஏழு பதக்கங்களை வென்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மாதவன். இறுதியாக துல்கர் சல்மான் நடித்த ‘சார்லி’ படத்தின் ரீமேக்கான ‘மாறா’ படத்தில் நடித்திருந்தார். தற்போது மாதவன் இயக்கி நடித்துள்ள ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

இந்நிலையில் மாதவனின் மகனான வேதாந்த், பெங்களூருவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் ஏழு பதக்கங்களை வென்றுள்ளார். சிறு வயது முதலே நீச்சல் போட்டியில் ஆர்வம் கொண்ட வேதாந்த், முன்னதாக தாய்லாந்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அதன் பின்னர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீச்சல் பிரிவில் பங்கேற்று இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்றார்.

இதனைத் தொடர்ந்து தற்போது பெங்களூருவில் நடைபெற்ற ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற வேதாந்த், நான்கு வெள்ளிப் பதக்கங்கள், மூன்று வெண்கலப் பதக்கங்கள் என ஒட்டுமொத்தமாக ஏழு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். சமூக வலைதளங்களில் பலரும் வேதாந்த் மாதவனுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

மேலும்