யூடியூப் சேனல்களுக்கு எதிராக சமந்தா தொடர்ந்த வழக்கின் விசாரணையில் சமந்தாவுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரும் நிலை உருவாகியுள்ளது.
சமீபத்தில் தனது கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக சமந்தா அறிவித்தார். சமந்தாவின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக ஊடகங்களிலும், யூடியூப் சேனல்களிலும் விவாதிக்கப்பட்டன.
இன்னொரு பக்கம் இந்த விவாகரத்துக்குக் காரணம் சமந்தாதான் என்று அவரைப் பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இதனிடையே, தனது தனிப்பட்ட விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம் என்றும், எந்தவிதமான எதிர்மறை விஷயங்களும் தன்னைப் பாதிக்காது என்றும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
மேலும் தன்னைப் பற்றி அவதூறாகத் தகவல்கள் பரப்பிய சில யூடியூப் சேனல்கள் மீதும், தனது திருமண வாழ்க்கை குறித்தும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் தவறாகப் பேசிய வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர் மீதும் சமந்தா மானநஷ்ட வழக்குத் தொடர்ந்திருந்தார்.
ஆனால், இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட சேனல்கள் மீது வழக்குத் தொடர்வதை விட அவர்களை நடிகை சமந்தா மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். மேலும், தங்களின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து ஊடகங்களில் தகவல்கள் பகிரும் பிரபலங்கள், மீண்டும் அதே ஊடகங்கள் மீது வழக்குத் தொடர்வது சரியல்ல என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் பட வழக்கில் கைதானபோது, ஷில்பா ஷெட்டி நீதிமன்றத்துக்குச் சென்று ஊடகங்கள் தன்னைப் பற்றிய அவதூறு செய்திகள் வெளியிட நிரந்தரத் தடை உத்தரவு பெற்றது குறித்து சமந்தாவின் வழக்கறிஞர் தரப்பு மேற்கோள் காட்டியது.
எனவே இதைப் போலவே சமந்தா வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மற்றொரு தேதியில் விசாரணை தொடரும் என்று தீர்ப்பை இப்போதைக்கு ஒத்திவைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago