தீபாவளிக்குத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது டாக்டர்

By செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது 'டாக்டர்'.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய், அர்ச்சனா, யோகி பாபு, கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'டாக்டர்'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்தது. அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

'டாக்டர்' படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனை புரிந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 60 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது. மேலும், சிவகார்த்திகேயன் படங்களில் அதிக வசூலை ஈட்டிய படம் என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்தப் படத்தை தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு ஒளிபரப்பவுள்ளது சன் டிவி. நவம்பர் 4-ம் தேதி மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாகப் போய்க் கொண்டிருக்கும் படம், உடனடியாக ஒளிபரப்பாக இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இது தொடர்பான விளம்பரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

நவம்பர் 4-ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பைத் தொடர்ந்து, நவம்பர் 5-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது 'டாக்டர்'. இது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

'டாக்டர்' படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து 'டான்' வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விரைவில் வெளியிடவுள்ளது படக்குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்