ரஜினி விருது பெற்ற விழாவில் நானும் விருது பெற்றதில் மகிழ்ச்சி: தனுஷ்

By செய்திப்பிரிவு

ரஜினி விருது பெற்ற விழாவில் நானும் விருது பெற்றதில் மகிழ்ச்சியாக இருப்பதாக தனுஷ் தெரிவித்தார்.

67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் 'அசுரன்' படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார் தனுஷ்.

இந்த விருது பெறும் விழாவுக்காக ரஜினி, லதா ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், தனுஷின் மகன்கள் என அனைவரும் சென்றிருந்தனர். ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது கொடுக்கப்பட்டபோது விழா அரங்கிலிருந்த அனைவருமே எழுந்து நின்று வாழ்த்து தெரிவித்தனர்.

'அசுரன்' படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கிய பிறகு பத்திரிகையாளர்கள் மத்தியில் தனுஷ் பேசும்போது, "சின்ன வயதிலிருந்து திரையில் பார்த்துப் பிரமித்துக் கைதட்டி விசிலடித்த எங்க சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தாதா சாகேப் பால்கே விருது வாங்கிய அதே மேடையில் தேசிய விருது வாங்கியது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

44 mins ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்