திரைவானின் சூரியன் ரஜினி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

By செய்திப்பிரிவு

திரைவானின் சூரியன் ரஜினி என்று தாதா சாகேப் பால்கே விருது பெறும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. 2019-ம் ஆண்டிற்கான இந்த விருது ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பாக தமிழ்த் திரையுலகிலிருந்து சிவாஜி மற்றும் இயக்குநர் பாலசந்தர் ஆகியோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.

தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பலரும் ரஜினிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

"திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறும் அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம் நிறை வாழ்த்துகள். திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்"

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்