நல்ல கதைகள் இங்கே அரிதாகத்தான் வரும்: கார்த்தி சிறப்பு பேட்டி

By மகராசன் மோகன்

‘‘மணி சார் என்னிடம், ‘உனக்கு இங்கே எல்லா சுதந்திரமும் உண்டு. ஆனா ஒண்ணு; நான் எதையுமே சொல்லித்தர மாட்டேன். நீயாதான் கத்துக்கணும்’னு சொல்வார். இப்ப ஒரு நடிகரா போனாலும் திரும்பவும் அவரோட அஸிஸ்டெண்ட் மனநிலையிலதான் இருக்கப்போறேன். எனக்கு அங்கே எல்லா உரிமையும் உண்டு’’ என்கிறார் நடிகர் கார்த்தி.

‘காஸ்மோரா’ படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்கத் தயாராகி வரும் கார்த்தியிடம் பேசியதிலிருந்து:

‘தோழா’ திரைப்படத்தில் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்?

நானும், நாகார்ஜுனா சாரும் இந்தக் கதையில ஹீரோக்களா இல்லாமல் ரெண்டு மனிதர்களாத்தான் தெரிவோம். ஒரு திருடனுக்கும், பணக்காரருக்கும் இடையே எப்படி நட்பு வர முடியும்? அந்த நட்புதான் படம். இது பிரெஞ்ச் படத்தோட ரீமேக். அதை இங்க அப்படியே எடுக்க முடியாது. அதை உணர்ந்து சரியா தமிழுக்கும், தெலுங்குக்கும் இயக்குநர் மாற்றி எழுதியிருந்தார். கதையை கேட்டு முடிக்கும்போது இதை எப்படி தவிர்ப்பதுன்னு தெரியல. அந்த அளவுக்கு இந்தக் கதை பிடிச்சுப் போச்சு.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் ரிலீஸாகப் போகிறது. இனி நீங்கள் தொடர்ந்து தெலுங்கிலும் கவனம் செலுத்துவீர்களா?

சினிமாவுக்கு வந்து 10 வருஷம் ஆச்சு. 11 படங்கள்தான் நடிச்சிருக்கேன். தமிழ்லயே இவ்ளோதான் நடிச்சிருக்கேன்னும்போது தெலுங்குல எவ்ளோ பண்ண முடியும்னு தெரியல. நல்ல கதைகள் இங்கே அரிதாகத்தான் வரும். நாம நடிக்கப்போற படத்தை கதைகள்தான் தீர்மானிக்கிறது. ஒரு கதைக்குள்ள போனா ஆறு மாதம் பயணிக்கிறோம். முழுமையா அதுக்குள்ள போனாதான் நல்லது.

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கப்போகும் படத்துக்கு எப்படி தயாராகி வருகிறீர்கள்?

ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. அந்த யூனிட் எனக்கு புதுசு இல்ல. எல்லாரையுமே தெரியும். அங்கே நான் நடிகனா போனாலும் எதுவும் மாறப்போறதில்லை. திரும்பவும் என்னோட மணி சார்கிட்ட நிறைய கத்துக்கப்போறேன்.

‘மனம்’ ரீமேக் படத்தில் நீங்க, அண்ணன் சூர்யா, உங்க அப்பா சேர்ந்து நடிக்கிறதா பேசினாங்களே?

ஆமாம். பேசினாங்க. அதை தொடர்வது கஷ்டம். அந்தக் கதை நாகார்ஜுனா சார் குடும்பத்துக்காகவே எழுதப்பட்டது. அதை நாம தொடுறப்போ சரியா வராதே.

படப்பிடிப்புக்கு இடையே நடிகர் சங்க வேலைகளுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?

குடும்பத்தோடு இருக்கிற நேரம் மொத் தமா அடிவாங்குது. என் மகள்கூட நேரம் செலவழிக்க முடியல. அப்பா, அம்மா, மனைவிகூட பேசுற நேரம் குறையுது. ஆனா, நம்ம நேரம் மத்தவங்களோட நல்லதுக்குத்தானே போகுதுன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. நடிகர் சங்க கட்டிடம் கட்டுறது ஒரு கோயில் கட்டுறது மாதிரிதான். அதுல கிடைக்கிற வருமானத்தை வைத்து ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற உதவிகள் செய்ய முடியும். கலைஞர்களுக்கு நிரந்தர வாழ்வாதாரம் கொடுக்குறதுக்காகத்தான் எல்லாரும் மெனக்கெடுறோம். இதுமாதிரி வேலைகள்ல ஒரு துரும்பா இருந்தாலே சந்தோஷம்தானே.

நடிகர் சங்க கட்டிடத்துக்காக நீங்க, விஷால், ஆர்யா, ஜீவா உள்ளிட்ட நண்பர்கள் சேர்ந்து நடிக்கப்போற படத்தை எப்போ தொடங்கப் போறீங்க?

அடுத்த வருஷம். இப்போ முதல்ல கிரிக்கெட். அதுல கிடைக்குற பணத்தை வைத்து கட்டிடத்தோட ஆரம்ப வேலைகளை தொடங்குறோம். கட்டிடம் முழுமையடையணும்னா நிச்சயம் படம் நடிச்சுதான் ஆகணும். அது நடக்கும்.

‘அகரம் ஃபவுண்டேஷன்’, ‘புதியதலை முறை’, ‘தி இந்து’ இணைந்து தொடங்கப்பட் டுள்ள ‘யாதும் ஊரே’ இயக்கத்தின் அடுத்த கட்ட பணிகளில் அண்ணன் சூர்யாவோடு சேர்ந்து தீவிரமாக இறங்கியிருக்கீங்களே?

‘முதல்ல நாம ஆரோக்கியமா இருந்தாத்தான் எல்லாத்துலயும் சாதிக்க முடியும்’னு அப்பா சொல்வார். சின்ன தலைவலி இருந்தாக்கூட அன்னைக்கு திட்டமிட்ட எல்லா வேலையும் பாதிக்குது. நம்மோட நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து நாம மறந்துட்டோம். வெளியில நடந்ததை பார்த்து வந்த நமக்கு சென்னையில நம்ம அருகிலேயே இயற்கை பேரழிவு நடந்தப்போதான் பெரிய விஷயமா ஆனது. இனியும் அப்படி நடக்க விடாம பார்த்துக்கணும். தொடர்ந்து எல்லோருக்கும் ஞாபகப்படுத்தணும். இறங்கி வேலை பார்க்கணும். அப்படி நினைத்துதான் இந்த வேலைகளை தொடங்கினோம். தொடர்ந்து நடக்கும்.









VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்