சர்ச்சைக்குரிய படத்தில் பாலாஜி முருகதாஸ் நாயகனாக அறிமுகமாகவுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் வருடந்தோறும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். கமல் தொகுத்து வழங்கும் வரும் இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 4-வது சீசனில் 2-வது வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர் பாலாஜி முருகதாஸ்.
ஆரிக்கும் பாலாஜிக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம், ஷிவானியுடன் ஏற்பட்ட நட்பு உள்ளிட்டவை மக்கள் மத்தியில் பெருவாரியாக விவாதிக்கப்பட்டது. தற்போது பாலாஜி முருகதாஸ் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தினை யார் இயக்கவுள்ளார், யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பதை இன்னும் படக்குழுவினர் அறிவிக்கவில்லை.
பாலாஜி முருகதாஸ் நடிக்கும் படத்தினை லிப்ரா நிறுவனத்தில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கவுள்ளார். பாலாஜி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு தனது சமூக வலைதள பதிவில் ரவீந்தர் கூறியிருப்பதாவது:
"பாலாஜி முருகதாஸ் இதுவரை நாங்கள் எடுத்ததில் மிகவும் சர்ச்சையான, கவர்ச்சிகரமான திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் என்பதை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். முழுக்க அன்போடு, நல்ல நடிகராக பாலாஜி உங்களுக்குப் பொழுதுபோக்கைத் தருவார். அவரை ஆசிர்வதித்து வாழ்த்துங்கள்"
இவ்வாறு தயாரிப்பாளர் ரவீந்தர் தெரிவித்துள்ளார்.
Loading...
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago