சுசீந்திரன் இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
தொடர்ச்சியாக பல்வேறு படங்கள் இயக்கி வந்தார் சுசீந்திரன். கரோனா அச்சுறுத்தல் சமயத்தில் கூட, இரண்டு படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். தற்போது இவருடைய இயக்கத்தில் 'ஏஞ்சலினா' மற்றும் 'சிவ சிவா' ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன.
இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதையை எழுதி வந்தார் சுசீந்திரன். இந்தக் கதையில் நாயகனாக நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை இன்னும் இறுதிக்கட்டத்தை எட்டவில்லை.
ஆனால், இந்தக் கூட்டணி இணைவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'யானை', அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பார்டர்' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அருண் விஜய்.
இந்த இரண்டு படங்களை முடித்தவுடன், சுசீந்திரன் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago