சூர்யா தயாரிப்பில் பாலா இயக்கும் படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.
'நாச்சியார்' படத்துக்குப் பிறகு, பாலா இயக்கத்தில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. அவருடைய இயக்கத்தில் உருவான 'வர்மா' படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதையொன்றைத் தயார் செய்தார் பாலா. இந்தப் படத்தைத் தயாரிக்க சூர்யாவின் 2டி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பாலாவின் கதையைக் கேட்ட சூர்யா, இதில் தானே தயாரித்து நடிப்பதாகக் கூறி, தேதிகள் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கிறாரா அல்லது கவுரவ வேடத்தில் நடிக்கிறாரா என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்துக்கான போட்டோ ஷூட் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. வரும் ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியெம் பணிபுரியவுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago