ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த' படத்தின் தணிக்கைப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அண்ணாத்த'. நவம்பர் 4-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
தற்போது படத்தின் தணிக்கைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனைப் பார்த்துவிட்டு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர் தணிக்கை அதிகாரிகள். இதனால், படத்தின் வெளியீடு தொடர்பான அனைத்துப் பணிகளும் முடிவுக்கு வந்துள்ளன. விரைவில் ட்ரெய்லர் மற்றும் இதர பாடல்கள் ஆகியவற்றை வெளியிடவுள்ளது படக்குழு.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தெலுங்கில் 'பெத்தண்ணா' என்ற பெயரில் வெளியாகவுள்ளது. விரைவில் இதர மொழிகளிலும் டீஸரை வெளியிடப் படக்குழு தயாராகி வருகிறது.
» 'வலிமை' வாய்ப்பு கை நழுவியதில் ஏமாற்றம்: பிரசன்னா
» 'நானே வருவேன்' படப்பிடிப்பு தொடக்கம்: ஒளிப்பதிவாளர் மாற்றம்
இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான், எடிட்டராக ரூபன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago