'வலிமை' வாய்ப்பு கை நழுவியதில் ஏமாற்றம்தான் என்று பிரசன்னா தெரிவித்துள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், கார்த்திகேயா, ஹியூமா குரோஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வலிமை'. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அவை இணையத்தில் பெரும் வைரலாகின.
மேலும், 'வலிமை' குறித்து ஹெச்.வினோத் பேட்டியும் வெளியானது. இதில் அஜித் கதையைக் கேட்டதும், வில்லன் கதாபாத்திரத்துக்கு பிரசன்னா அல்லது அர்ஜுன் தாஸ் பொருத்தமாக இருப்பதாகச் சொன்னதாக ஹெச்.வினோத் பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.
அஜித்தின் இந்த நம்பிக்கை தொடர்பாக பிரசன்னா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"எனது அன்புக்குரிய தல என் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்பதில் பெருமகிழ்ச்சி. 'வலிமை' வாய்ப்பு கை நழுவியதில் ஏமாற்றம்தான் என்றாலும் கூட பெரிய விஷயங்கள் என்னைச் சேரும் என்று நம்புகிறேன்".
இவ்வாறு பிரசன்னா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 'வலிமை' வாய்ப்பு தன்னை விட்டுப் போனதற்கான காரணம் தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார் பிரசன்னா. அது இணையத்தில் பெரும் விவாதத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. (அந்த அறிக்கையை முழுமையாகப் படிக்க)
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago