முன்னணி நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் தனது காதலை சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். மகேஷ் பாபு, ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலருக்கும் நாயகியாக நடித்துள்ளார். தற்போது தமிழில் கமல் நடித்து வரும் 'இந்தியன் 2', சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'அயலான்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.
இந்தியிலும் பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இன்று (அக்டோபர் 10) ரகுல் ப்ரீத் சிங்கின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே, இந்தி திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர் என வலம் வரும் ஜாக்கி பாக்நானியை காதலித்து வருவதைத் தனது பிறந்த நாளை முன்னிட்டு உறுதிப்படுத்தியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
ஜாக்கி பாக்நானியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரகுல் ப்ரீத் சிங் கூறியிருப்பதாவது:
"நன்றி அன்பே!! இந்த ஆண்டு நீ எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு. என் வாழ்க்கையில் வண்ணத்தைச் சேர்த்த உனக்கு என்னுடைய நன்றி. என்னை இடைவிடாமல் சிரிக்க வைப்பதற்கு நன்றி. நீ நீயாக இருப்பதற்கு நன்றி. இன்னும் ஒன்றாகச் சேர்ந்து அதிக நினைவுகளை உருவாக்குவதற்கு..."
இவ்வாறு ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங் பிறந்த நாளை முன்னிட்டு ஜாக்கி பாக்நானி, "நீயின்றி, நாட்கள் நாட்களாக இல்லை. நீயின்றி மிகவும் சுவையான உணவுகளில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. எனக்கு மிகவும் முக்கியமான மிக அழகான ஒரு ஆன்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். உன் புன்னகையைப் போலவே இந்த நாளும் உனக்கு மிகவும் பிரகாசமாகவும் உன்னைப் போல அழகாகவும் இருக்கட்டும். பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்பே" என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங் காதல் அறிவிப்புக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார். தமிழில் த்ரிஷா நடிப்பில் வெளியான 'மோகினி' படத்தில் ஜாக்கி பாக்நானி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago