'செல்லம்மா செல்லம்மா' பாடல் உருவானதன் பின்னணி

By செய்திப்பிரிவு

'டாக்டர்' படத்தின் 'செல்லம்மா செல்லம்மா' பாடல் உருவானதன் பின்னணியைத் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், வினய், ப்ரியங்கா மோகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்டர்'. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் அக்டோபர் 9-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தை விளம்பரப்படுத்தப் பேட்டிகள் அளித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அதில் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் 'செல்லம்மா செல்லம்மா' பாடல் உருவானதன் பின்னணியை விவரித்துள்ளார்.

முதல்கட்ட ஊரடங்குகள் அமலுக்கு வந்த சில மாதங்களில், மக்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் உற்சாகமான ஒரு பாடலை உருவாக்க வேண்டிய தேவை இருப்பதாக சிவகார்த்திகேயனும், அனிருத்தும் நினைத்துள்ளார்கள். அப்படித்தான் 'செல்லம்மா செல்லம்மா' பாடலை இருவரும் உருவாக்கியுள்ளனர்.

அந்தப் பாடலின் எண்ணத்தை இயக்குநர் நெல்சனிடம் தெரிவித்தவுடன், அவர் இதைப் படத்தில் எங்கே வைக்கலாம் என்று முடிவு செய்து வைத்தார் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தற்போது 'செல்லம்மா செல்லம்மா' பாடல் யூடியூப் பக்கத்தில் 12 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் வீடியோ ப்ரோமோவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE