'தளபதி 66' படத்தில் மகேஷ் பாபுவின் மகள் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து விசாரித்தபோது இது வதந்தி என்று தெரியவந்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் விஜய், செல்வராகவன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் பணிகளை நவம்பருக்குள் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
'பீஸ்ட்' படத்துக்குப் பிறகு வம்சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய். தில் ராஜு தயாரிக்கவுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகவுள்ளது. இதற்குத் தகுந்தாற்போல் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் விஜய்யுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மகேஷ் பாபு - இயக்குநர் வம்சி இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பதால் இது உண்மையாக இருக்கும் என்று பலரும் கருதினார்கள்.
» மீண்டும் இணையும் ஆர்யா - பசுபதி கூட்டணி
» தன் திறமையைத் திரையில் காட்டாமலே போய்விட்டவர் சந்திரஹாசன்: கமல் உருக்கம்
இது தொடர்பாக விசாரித்தபோது, "இது வெறும் வதந்திதான். உண்மையில்லை. இப்போதுதான் கதையின் இறுதி வடிவத்தில் பணிபுரிந்து வருகிறார் வம்சி" என்று தெரிவித்தார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
27 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago