'காசேதான் கடவுளடா' ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆர்ஜே பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சித்ராலயா கோபு இயக்கத்தில், முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன், மனோரமா, லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்க ஏவிஎம் தயாரித்த படம் 'காசேதான் கடவுளடா'. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது மீண்டும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். இதில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, 'குக் வித் கோமாளி' புகழ், சிவாங்கி, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே முடித்துவிட்டது படக்குழு.
தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆர்ஜே பாலாஜி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். விரைவில் 'காசேதான் கடவுளடா' படத்தின் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
» சமந்தா, சைதன்யாவுக்கு இடையே நடந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது: நாகார்ஜுனா வேதனை
» நதிக்கரை தூய்மைப்பணியில் ஈடுபட்ட பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago