'டாக்டர்' படத்துக்குப் பெரிய பலம் அனிருத்: இயக்குநர் நெல்சன்

By செய்திப்பிரிவு

'டாக்டர்' படத்துக்குப் பெரிய பலம் இசையமைப்பாளர் அனிருத் என்று இயக்குநர் நெல்சன் தெரிவித்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்டர்'. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அக்டோபர் 9-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனை முன்னிட்டு 'டாக்டர்' படத்தை விளம்பரப்படுத்தப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் இயக்குநர் நெல்சன் பேசியதாவது:

"படம் பண்ணலாம் என்று முடிவானவுடன், சிவகார்த்திகேயனின் வழக்கமான படங்களிலிருந்து கொஞ்சம் வெளியே பண்ணலாம் என முடிவு செய்தேன். அதற்கு அவர் ஒப்புக் கொள்வாரா என்ற சந்தேகம் இருந்தது. 2 ஐடியா சொன்னேன். ரெண்டுமே நன்றாக உள்ளது, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார் சிவகார்த்திகேயன்.

4-5 மாதங்கள் கதையில் பணிபுரிந்து, படப்பிடிப்புக்குச் சென்றோம். 10 நாட்கள் படப்பிடிப்புக்குப் பிறகு தான் எனக்கு நம்பிக்கையே வந்தது. படம் நினைத்தது போலவே ஒரு நல்ல படமாக வந்துள்ளது. சிவகார்த்திகேயனே படத்தயாரிப்பாளர் என்பதால், அது எனக்கு உதவியாக இருந்தது. என்னைக் கேள்வி கேட்காமல் முழு சுதந்திரம் கொடுத்தார். நண்பர் என்பதால் அதையும் கொஞ்சம் உபயோகித்துக் கொண்டேன்.

விஜய் கார்த்திக் ஒவ்வொரு ஷாட்டுக்கும் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார். ஆனால் நினைத்ததைக் கொண்டு வந்து விடுவார். முழுப் படத்தையும் எடிட் செய்தப் பிறகு, எனக்கே தெரியாமல் எடிட் செய்துவிட்டார் நிர்மல். அந்தளவு படத்துடன் ஒன்றியிருப்பார். ப்ரியங்கா அவரது முழுத்திறமை இந்தப்படத்தில் வெளிப்படவில்லை, அவருடன் மீண்டும் படங்கள் செய்வேன்.

வினய் பார்த்துப் பழகும் போது அப்பாவியாக இருந்தார் ஆனால் படத்தில் வில்லனாக அசத்தியுள்ளார். அருணை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். அவரை எல்லாப்படத்திலும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன் அவர் இல்லாதது மிகப்பெரும் வருத்தம். அனிருத்தை வைத்துத் தான் திரைக்கதையே எழுதுவேன் அவர் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். படமும் நினைத்தது போல அழகாக வந்திருக்கிறது"

இவ்வாறு இயக்குநர் நெல்சன் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

20 mins ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்