ஓடிடியில் 'ஜெய் பீம்' மற்றும் 'உடன்பிறப்பே' ஆகிய படங்களின் வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவான 4 படங்கள் நேரடி ஓடிடி வெளியீட்டை உறுதி செய்தன. இதில் 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிவிட்டது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்த 2 படங்களின் வெளியீட்டை அமேசான் ப்ரைம் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'உடன்பிறப்பே' திரைப்படம் அக்டோபர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ஜெய் பீம்' திரைப்படம் நவம்பர் 2-ம் தேதி வெளியாகும் என்று அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவும் பல்வேறு மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago