ஓடிடியில் வெளியாகிறது அத்ரங்கி ரே

By செய்திப்பிரிவு

அக்‌ஷய் குமார், தனுஷ் இணைந்து நடித்துள்ள 'அத்ரங்கி ரே' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'அத்ரங்கி ரே'. டி-சீரிஸ் நிறுவனம் வழங்க கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரிந்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு மதுரை, டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. மேலும், படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கும் தயாராகவுள்ளது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டபடி வெளியாகாமல் இருந்தது.

தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டாலும் பல்வேறு பெரிய படங்கள் தொடர்ச்சியாக வெளியாகவுள்ளன. இதனை முன்னிட்டு 'அத்ரங்கி ரே' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் இதன் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. விரைவில் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்