உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள புதிய படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஃபகத் பாசிலை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து முடித்துவிட்டார் உதயநிதி ஸ்டாலின். அதனைத் தொடர்ந்து அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இது இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'ஆர்டிகிள் 15' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடித்துத் தயாரிக்கவுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இது பெரும் பொருட்செலவில் உருவாகும் படமாகும். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.
இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஃபகத் பாசிலிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. படப்பிடிப்புத் தேதிகள் முடிவுவானவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது. தற்போது மலையாளப் படங்கள் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஃபகத் பாசில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago