'திரெளபதி' படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் என்ன என்பது குறித்து இயக்குநர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'திரெளபதி'. கூட்டு நிதி முயற்சியில் இயக்குநரே தயாரித்திருந்தார். குறைந்த பொருட்செலவில் உருவான இந்தப் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
'திரெளபதி' படத்துக்குப் பிறகு, ரிச்சர்ட், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ருத்ர தாண்டவம்' படத்தை இயக்கியுள்ளார் மோகன்.ஜி. இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்து அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், 'திரெளபதி' படத்தின் பட்ஜெட் என்ன, வசூல் நிலவரங்கள் என்ன என்பது குறித்த தகவலை வெளியிட்டார் இயக்குநர் மோகன்.ஜி.
» யார் மனதையும் காயப்படுத்துவதற்காக 'ருத்ர தாண்டவம்' படத்தை எடுக்கவில்லை: இயக்குநர் மோகன்.ஜி
» மத்திய அரசைப் பார்த்து விஜய் பயந்துவிட்டார்: கே.ராஜன் காட்டம்
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
" ’திரௌபதி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படம் இயக்குவதற்கான வாய்ப்புகள் வந்தன. ’திரௌபதி’ படத்தின் பட்ஜெட் ரூ.45 லட்சம். ஆனால், படத்தின் பட்ஜெட்டை விட இருபதிலிருந்து இருபத்து மூன்று மடங்கு கூடுதலாக வசூலித்தது. இதனால் ஏராளமான வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன. முன்னணி நடிகர்கள் இருவர், நல்ல ஊதியத்தில் படங்களை இயக்க வாய்ப்பு வழங்கினார்கள்.
'பழைய வண்ணாரப்பேட்டை' படத்திலிருந்து 'திரௌபதி' படம் வரை என்னைச் சுற்றி இருப்பவர்களின் கதைகளைத்தான் படைப்பாக உருவாக்கி இருக்கிறேன். சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மையப்படுத்தித்தான் 'திரௌபதி' திரைப்படத்தை உருவாக்கி இருந்தேன்".
இவ்வாறு மோகன்.ஜி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago