ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால்

By செய்திப்பிரிவு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக விஷால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா, அமைரா, ஜனனி ஐயர், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பஹீரா'. இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இந்நிலையில், அடுத்த படத்துக்காகக் கதைகள் எழுதி வந்தார் ஆதிக் ரவிச்சந்திரன்.

பல்வேறு நாயகர்களைச் சந்தித்துக் கதைகள் கூறிவந்தார். இறுதியாக, விஷாலுக்கு ஆதிக் ரவிச்சந்திரன் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே நாயகனாக நடிக்கவுள்ளார். 'எனிமி' படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனமே, இந்தப் புதிய படத்தையும் தயாரிக்கவுள்ளது.

விரைவில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. தற்போது விஷாலுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்