சன் டிவி, விஜய் டிவிக்குப் போட்டியாக ஜீ தமிழும் களமிறங்கியுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து, புதிய படங்களின் வெளியீட்டு முறை என்பது மாறிவிட்டது. திரையரங்க வெளியீடு என்பதைத் தாண்டி, ஓடிடியில் சில படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதைத் தாண்டி சில படங்கள் நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இதற்கும் தொலைக்காட்சி நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. சன் டிவியில் 'துக்ளக் தர்பார்', விஜய் டிவியில் 'ஏலே', 'பூமிகா', 'மண்டேலா', கலர்ஸ் தமிழில் 'சர்பத்' உள்ளிட்ட சில படங்கள் நேரடியாக ஒளிபரப்பாகியுள்ளன.
தற்போது இதற்குப் போட்டியாக ஜீ தமிழும் களமிறங்கியுள்ளது. வெற்றி துரைசாமி இயக்கத்தில் விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'என்றாவது ஒரு நாள்' படத்தை நேரடி ஒளிபரப்பு உரிமைக்குக் கைப்பற்றியுள்ளது ஜீ தமிழ். இதனை அக்டோபர் முதல் வாரத்தில் திரையிடுவார்கள் எனத் தெரிகிறது.
» 'வலிமை' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
» யதார்த்த நடிகர்கள் மாஸ் படங்களில் சந்திக்கும் விபத்து: சீனுராமசாமி பகிர்வு
மனித குலத்தின் இன்றியமையாத பகுதியான கால்நடை வளர்ப்பு, உலகமயமாக்கல் கொண்டு வந்த இடப்பெயர்வு பற்றிய கதை இது. தண்ணீர் பஞ்சம், குழந்தைத் தொழிலாளர்கள், நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களின் முன்னிருக்கும் சவால்களைக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. விதார்த் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், மாஸ்டர் ராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
'தி தியேட்டர் பீப்பிள்' நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக என்.சண்முக சுந்தரம், இசையமைப்பாளராக என்.ஆர்.ரகுநந்தன், எடிட்டராக மு.காசி விஸ்வநாதன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago